Sunday, 8 February 2009

ஊமை விழிகள்......




ஊமை விழிகள் திரைப்படத்தில் மனோஜ் கியானின் இசையில், மனதுக்குள் புத்துயிர் கொண்டிருக்கும் இந்தப் பாடலைக் கேட்க.............


தோல்வி நிலை என நினைத்தால்.....

Saturday, 7 February 2009

பாடல் கேட்கும் போதே மனம் துள்ளிக் குதிக்கும்.....





































சிறு பொன் மணி அசையும் அதில் தெறிக்கும் சிறு இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்....
நிதமும் தொடரும் நினைவும் கனவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

*******

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

*******

நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் பயிரானது உன் நினைவுகள்

*******

சிறு பொன் மணி அசையும் அதில் தெறிக்கும் சிறு இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்....
நிதமும் தொடரும் நினைவும் கனவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்



















(பாரதி ராஜா, இளைய ராஜா, எஸ் ஜானகி - மூவர் கூட்டணி)

அபூர்வ ராகங்கள்.... யேசுதாஸின் இசை மழை....





தமிழ் திரைப்பாடல்களில் சரித்திரம் குறித்த பாடல் இது.

பொதுவாக அனைத்து பாடல்களிலும், பெரும்பாலும் சரணம் ஒரே மெட்டில் இருக்கும்.

இந்தப் பாடலில் மூன்று சரணங்களும் வித்தியாசமான மெட்டில் இசைக்கப்பட்டிருக்கும்.


அபூர்வ ராகங்கள்


அதிசய ராகம் ஆனந்த ராகம்


அழகிய ராகம் அபூர்வ ராகம்

*******

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்

அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில் அவளொரு பாகம்

இந்திர லோகத்து சக்கர வாகம்

*******

பின்னிய கூந்தல் கருநிற நாகம்

பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்

அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்

அது என் யோகம்

*******

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி

முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி

அவள் ஒரு பைரவி, அவள் ஒரு பைரவி

*******
அதிசய ராகம் ஆனந்த ராகம்


அழகிய ராகம் அபூர்வ ராகம்

Thursday, 5 February 2009

மனம் மறந்து மதி மயங்க........

தனிமையில், நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு,
இந்தப்பாடலை கேட்கும்போது, மனம் மயிலிறகாகிவிடும்...

காதல் ஓவியம்



பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்,
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

*******

ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்

தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்

தீயில் நின்ற போதும் அந்த தீயே வெந்து போகும்
நானே நாதம்.... ஆ...ஆ..ஆ..ஆ..
தனம்த நம்
தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்
நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

*******

வானம் என் விதானம் இந்த பூமி சந்நிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்

ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்

வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்......ஆ...ஆ...ஆ...ஆ..
தனம்த நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
தனம்த நம் தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்

தம்தம்த நம் தம்தம்த
நம் தம்தம்த நம்தம்

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்

(Chinese Symbol for ‘Brave’)

ஏமாற்றம், நம்பியவர்கள் துரோகம் இழைக்கும்போது.... நடக்கும் என்று எதிர்பார்த்த ஒன்று கை நழுவிப்போகும் போது, இன்னும் எவ்வளவோ..... இது போன்ற சந்தர்ப்பங்களில், எனக்கு நானே தெம்பூட்ட, இந்தப்பாடலைத்தான் கேட்பேன்....

'அண்ணாமலை'

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்.

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்...

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

*******

"இமயலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம், எனது விழி தூங்காது.

வேர்வை மலை சிந்தாமல் வெற்றி மழை தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது

ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே

பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்"

*******

"இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்.

மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்.

பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே

எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்"
('அண்ணாமலை' திரைப்படத்தில் எஸ் பி பி உணர்ச்சிமயமாக பாடியது)

Tuesday, 3 February 2009

நம்மை நாமே நல்வழிப்படுத்துவதற்கு...


"இதயக்கனி"


"வானும், நீரும், காற்றும், நெருப்பும்
பொதுவில் இருக்குது.
மனுஷன் காலு பட்ட பூமி மட்டும்
பிரிஞ்சு கிடக்குது.

பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே. அமைதி நிலவுமே......"

"உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்...."

"பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும்போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை....அமைதி என்றும் இல்லை...."

"நதியைப்போலே நாமும் நடந்து பயன்தர வேண்டும்.
கடலைப்போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்.
வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்.
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்."

('இதயக்கனி' திரைப்படத்தில், டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எஸ் ஜானகி, மற்றும் குழுவினர், பாடிய பாடல்.)
ஒரு சினிமா பாடல்தான்... (பல்லவி தவிர்த்து சரணம் மட்டும்)

நம் வாழ்க்கையோடு பொருந்தும் நிர்ச்சலமான உண்மை......)