Saturday 7 February 2009

அபூர்வ ராகங்கள்.... யேசுதாஸின் இசை மழை....





தமிழ் திரைப்பாடல்களில் சரித்திரம் குறித்த பாடல் இது.

பொதுவாக அனைத்து பாடல்களிலும், பெரும்பாலும் சரணம் ஒரே மெட்டில் இருக்கும்.

இந்தப் பாடலில் மூன்று சரணங்களும் வித்தியாசமான மெட்டில் இசைக்கப்பட்டிருக்கும்.


அபூர்வ ராகங்கள்


அதிசய ராகம் ஆனந்த ராகம்


அழகிய ராகம் அபூர்வ ராகம்

*******

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்

அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில் அவளொரு பாகம்

இந்திர லோகத்து சக்கர வாகம்

*******

பின்னிய கூந்தல் கருநிற நாகம்

பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்

அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்

அது என் யோகம்

*******

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி

முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி

அவள் ஒரு பைரவி, அவள் ஒரு பைரவி

*******
அதிசய ராகம் ஆனந்த ராகம்


அழகிய ராகம் அபூர்வ ராகம்

2 comments:

Lancelot said...

Arumai Arumai...thalai padam la chumma superaa irukkum... (thalai is KAMAL and not Rajini)...


cheers...

ISR Selvakumar said...

மெல்லிசை மன்னரின் இசை ஆட்சி செய்த படம்.