Thursday 5 February 2009

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்

(Chinese Symbol for ‘Brave’)

ஏமாற்றம், நம்பியவர்கள் துரோகம் இழைக்கும்போது.... நடக்கும் என்று எதிர்பார்த்த ஒன்று கை நழுவிப்போகும் போது, இன்னும் எவ்வளவோ..... இது போன்ற சந்தர்ப்பங்களில், எனக்கு நானே தெம்பூட்ட, இந்தப்பாடலைத்தான் கேட்பேன்....

'அண்ணாமலை'

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்.

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்...

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

*******

"இமயலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம், எனது விழி தூங்காது.

வேர்வை மலை சிந்தாமல் வெற்றி மழை தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது

ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே

பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்"

*******

"இன்று கண்ட அவமானம், வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம், தாழ்வதில்லை தன்மானம்.

மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோசம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்.

பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே

எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்"
('அண்ணாமலை' திரைப்படத்தில் எஸ் பி பி உணர்ச்சிமயமாக பாடியது)

1 comment:

Lancelot said...

nalla paadal...ennaku ithu mathiri paadal naa athu oomai vizhigal padathulla irunthu... "Thozhvi nilai enna nenaithal paadal thaan"